Sunday, June 24, 2018

பிரேமை



அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு புரிசிரவஸ் பிரேமை சந்திப்புஉண்மையில் நம்ப முடியாததாக இருந்தது.  மலைகளின் உயர்வுஅங்குள்ளவர்களுக்கும் இருக்கிறதுசம நிலத்தின் சிறுமைகள் அங்கு சென்று தொடுவதும் எளிதல்ல.  காலம் அங்கு வேறு விதம்.  இத்தனை ஆண்டுகள்என இங்கு வாழ்வு தரும் சலிப்புமுதுமை உணர்வுசம்பவங்களின் பெருந்தொகை அங்கு இல்லை

பெரும் மலைகளின் முன்னம் கைக்கொண்டு செல்லும் சிறுமைகளுக்கு என்ன மதிப்புமனிதர் கொண்டு செல்லும்முக்கியம் எனக் கருதும்சிறுமைகளுக்கும் பெருங்கடவுளின் முன்னம் என்ன மதிப்பு?  தூர எறிந்து சும்மா இரு என்பதாகிறது.  என்றாலும் உள்ளும் புறமும் CCTV கேமராக்கள்பொருத்தி மனிதரை சதா கண்காணித்து தண்டனை தருவதுதான் கடவுளின் வேலை என்று மனித மனம் கற்பிக்கிறதுஅக்கருத்தும் மனித சிறுமையேஎனினும் பெருமானிடம் சமர்ப்பிக்க மனிதரிடம் சிறுமைகள் அன்றி வேறு என்னதான் இருக்கிறதுஇருப்பதைத் தானே தரமுடியும்அப்புறம் அவர்தான் எதுவேனும் செய்யவேணும்.

என்றாலும் பிரேமைக்கு எங்காவதுகொஞ்சமேனும் கோபம்வருத்தம் இல்லையாபிரேமை என்று பெயர் வைத்தீர்கள்பெருங்காதல் குற்றம் காண்பதுஇல்லை என்றாகிறது.

வேறு ஒரு புதிய உலகில் செல்வது போல் இவ்வத்தியாயங்களுள் புகுந்து பயணிக்கிறேன்.  போருக்கு ஆசைப்படுபவர்களுக்கு எல்லாம் ‘போங்கடா டேய்போங்க’ என்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அன்புடன்
விக்ரம்
கோவை