ஜெ
பூரிசிரவஸ் தன்னுடைய நகரத்தின் மாற்றத்தைச் சென்று பார்க்கும் இடம் முன்பு பல
ஆண்டு இடைவேளைக்குப்பின் பீஷ்மர் கங்கர்களின் நகரைச் சென்றுபார்த்த இடத்தை ஞாபகப்படுத்துகிறது.
அது வெண்முரசின் முதற்கனலிலேயே வந்துவிட்டது. தொடர்ச்சியாக இந்த மாற்றம் நடந்துகொண்டிருக்கிறது
பால்ஹிகபுரியில் இனி என்ன நடக்கும் என்பதை பீஷ்மரின் நாடு எப்படி மாறியதென்பதே காட்டுகிறது.
பால்ஹிகபுரியில் உள்ள பழங்குடிகள் சீக்கிரமே நான்கு வர்ணங்களாக மாறிவிடுவார்கள். அப்படி
மாறினால்தான் உறுதியான அரசை அவர்களால் உருவாக்க முடியும். பூரிசிரவஸ் திரும்பி வந்தால்
பீஷ்மர் பார்ப்பதுபோல அவன் அறியாத ஒரு சமூகச்சூழலைத்தான் பார்ப்பான்
எம்.குணசேகரன்
