Wednesday, May 6, 2015

இரு வீரர்கள்



ஜெ

வெண்முகில்நகரம் சாத்யகியும் பூரிசிரவஸும் சந்திக்கும் இடத்தில் முடிவது ஒரு கிளாஸிக்கல் எண்ட் ஆக இருந்தது. எதிர்பாராத முடிச்சுகள் திருப்பங்கல் வைத்துத்தான் நவீனக்கதைகள் முடியும். ஆனால் எதிர்பார்த்த முடிவையே கிளாஸிக்கலாக முடிப்பார்கள். ஏன் என்றால் அதுதான் சிம்மெட்ரியை அடையும். அந்த ஒருமை அடைந்திருக்கிறது வெண்முகில்நகரம்

இரண்டுபேரும் பெரிய எதிரிகளாக அறியபப்ட்டவர்கள். சாத்யகியின் கையால் பூரிசிரவஸ் சாகப்போகிறான். அந்த வன்மமும் கோபமும் வரவேண்டும் என்றால் இருவர் நடுவே அன்பும் இருந்திருக்கவேண்டும் என்பது ஒரு அருமையான எண்ணம்.

அவனைப்பார்த்ததுமே இவனுக்குப்பிடித்திருக்கிறது. அதுவும் விதியின் விளையாட்டே. அந்த மாதிரி ஒரு ஈர்ப்பு இல்லாத எதிரிகளே இல்லை. அவர்கள் எதிரிகளை நினைத்துக்கொண்டே இருப்பது அதனால்தான். பூரிசிச்ரவஸுக்கு சாத்யகி தன்னைப்போலவே இருப்பதாகத் தோன்றுவது ஆச்சரியமானது. ஆனால் அதுதான் வாழ்க்கையில் நடக்கிறது

ஆடிப்பிம்பங்கள் போர் செய்வதைப்பற்றி வெண்முரசில் நிறையவே வந்துகொண்டிருக்கிறது . இவர்களும் அப்படித்தான்

மனோ