Saturday, May 9, 2015

நூல்விளையாட்டு






ஜெ

வெண்முரசில் ஒரு விளையாட்டு இருக்கிறது. அது ஆசிரியனுக்கும் நமக்கு உள்ள விளையாட்டு நாம் எதிர்பார்க்கத இடத்தில் ஒரு சீட்டை எடுக்கிறீர்கள். இதோ இங்கே ஒரு சீட்டு எழுந்துவரும் என்று நினைக்கும்போது அது இல்லை. கடைசியிலே அந்தச்சார்வாகன் வருவான் என்று நினைக்கும்போது அவனைக்காட்டாமல் கூட்டத்தில் அவன் இருப்பதை மட்டும் உணர்த்துகிறீர்கள்

அதேபோல சிகண்டி மறுபடி வரவேயில்லை. அவ்வளவு பெரிய கதாபாத்திரம். ஆனால் சின்னக்கதாபாத்திரமான பூரிசிரவஸ் பெரிதாக வளர்ந்துவிட்டார். சாத்யகி பெரிதாக வளர்ந்துவிட்டார். இந்த வளர்ச்சியும் மகாபாரதத்தில் இல்லாத நாவலிலே உள்ள ஒரு விளையாட்டு

அதேபோல அம்பையை திரௌபதி நினைப்பாள் என்றும் அங்கே இறங்கும்போது எப்படியோ அம்பையின் பேச்சு வரும் என்றும் எதிர்பார்த்தேன். ஏன் என்றால் அம்பையும் திரௌபதியும் ஒன்று. அம்பை நினைத்ததை இவள் முடிக்கப்போகிறாள். ஆனால் அது வரவில்லை

இந்த விளையாட்டுதான் வெண்முரசில் முக்கியமான சுவாரசியம் என்று நினைக்கிறேன்

சண்முகம்.