Saturday, May 9, 2015

குறுக்குவெட்டு வாசிப்பு



ஜெ

இந்தமாதிரி ஒரு இடைவேளை ஒருவகையில் நல்லதுதான். மொத்த நாவல்களையும் ஒரு பார்வையிஏ தொகுத்துக்கொள்வதற்கு உதவுகிறது. இணையத்திலே வாசிக்கும்போதுள்ள tag மிகவும் உதவியானது. நான் அதிலே அர்ஜுனன், கர்ணன், திரௌபதி என்று தனித்தனியாகப்பிரித்து அவர்கள் வரக்கூடிய அத்தியாயங்களை மட்டும் ஒட்டுமொத்தமாக ஒரு நாவலாக வாசித்துப்பார்ப்பேன்.அப்போஹ்து உருவாகிவரும் சித்திரமே வேறு. அது வேறு ஒருவகை நாவல். அதுவரை வாசிக்காத பலகோணங்களிலே கதைகளைத் திறந்துகொள்ள முடிகிறது. அது வெண்முரசையே வேறு ஒரு நாவலாக ஆக்கிவிடுகிறது.

சிலகதாபாத்திரங்கள் சிதறிச்சிதறிக்கிடக்கிறார்கள். உதாரனமாக அர்ஜுனன். அவனுடைய பல பரிணாமங்கள் உள்ளன. சின்னப்பிள்ளையாக வருகிறான். இந்திரன் மகனாகக் கொண்டாடப்படுகிறான். அம்மாவுக்காக ஏங்குகிறான். அவன் அம்மாவுக்காக ஏங்கும் இடத்தை வாசித்து அப்படியே அவனுக்கு மஸாஜ் செய்துவிடுபவர் அவன் முதன்முதலாக பரத்தையிடம் போய்விட்டு வந்ததைப்பற்றிச் சொல்லும் இடத்தையும் வாசித்தபோது , அவன் ஏன் அந்தப்பெண்ணை நோக்கி ஈர்க்கப்பட்டான் என்று வாசிக்கும்போது பெரிய ஒரு அதிர்வு ஏற்பட்டது. அதுவரைப்புரியாத இடம் அது

இந்தக்குறுக்குவெட்டு வாசிப்பை எல்லாரும் இந்த இடைவெளியில் செய்துபார்க்கலாம் என்று தோன்றுகிறது

செல்வா