Tuesday, May 12, 2015

இன்னும் சிலர்



அன்புள்ள ஜெ.,

நான் வெண்முரசு நூல்களை வாங்குவதில்லை (நீலம் தவிர), வாங்கினால் பிற வாசிப்புகள் அனைத்தையும் நான் இழக்க வேண்டியிருக்கும். ஆனால் அதை ஈடுகட்ட நீங்கள் சுட்டிக்காட்டும் சமூக சேவைகளுக்கு நன்கொடை அளிப்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன்...

இன்னும் சில நண்பர்களை நானே அறிவேன். வெண்முரசு தொடர்ந்து படிப்பவர்கள்; நூல்களை வாங்காதவர்கள்; ஆனால் ஏதேனும் ஒரு வடிவில் அதை ஈடுகட்டுபவர்கள்.

அந்த முந்நூறு பேர் மட்டுமல்ல; கண்டிப்பாக அர்ப்பணிப்புள்ள வாசகர்கள் இன்னும் மூவாயிரம் பேராவது இருப்பார்கள்.

நன்றி
ரத்தன்

அன்புள்ள ரத்தன்
ஆம் நான் அதை அறிவேன். அந்தக்குறிப்பை அத்தனை பெயர்களைக் கண்ட அனுபவத்தை எழுதவே எழுதினேன்
ஜெ