Friday, May 15, 2015

கன்றுகள்



ஜெ

மேய்ச்சல்நில வாழ்கை பற்றி ஒருவர் எழூதியிருந்தார். அதன்பிறகுதான் மழைப்பாடலில் அந்தப்பகுதிகளைப்போய் வாசித்துப்பார்த்தேன். யாதவர்கள் புல்வெளிகளில் மாடுகளுடன் வாழ்ந்த அந்த வாழ்க்கையில் இருக்கும் ஒரு ரொமாண்டிக் நேச்சர்தான் மகாபாரதம் முழுக்க வருகிறது.

பாண்டவர்களைப் பார்த்தால் அவர்கள் தொடர்ச்சியாகக் காட்டுக்குச் சென்றுகொண்டே இருக்கிறார்கள். அவர்கள் நாட்டில் இருந்ததைவிட காட்டில் இருந்த நாளே அதிகம் என்று நினைக்கிறேன்

அந்த மழையும் மாடுகளும் புல்லாங்குழலும் ஒரு கனவுமாதிரி அவர்களின் மனசுக்குள் இருக்கும் என நினைக்கிறேன். ஆகவேதான் அத்தனைபேருக்குமே குழலோசை பெரிய ஈர்ப்பாக இருக்கிறது. கிருஷ்ணன் என்ற மேய்ச்சலிநிலத்து அழகன் வந்து அவர்களைக்கூட்டிச்செல்கிறான்

வாசுதேவனும் பிருதையும் மாடுமேய்க்கும் இடமும் கன்றுகளின் வர்ணனையும் அபாரமான ஒரு அனுபவமகா இருந்தன

ஜெயராமன்