Monday, May 11, 2015

செம்பதிப்புகள்

 
திரு ஜெ

செம்பதிப்பு ​பற்றிய கட்டுரையை வாசித்தேன்.
 
அதில் கீதாதேவிக்கு என்று கையெழுத்து இடும்பொழுது என்னை நினைத்துக் கொள்ளவும்.
 
ஒவ்வொரு பதிப்பும் நான் என் மனைவிக்கு கொடுக்கும் மகத்தான பரிசாக நினைக்கிறேன். அதுவும் அவருக்கு முன்பே அம்மா வாசித்து விடுகிறார்கள். பின்புதான் நான் !
 
உங்களின் கட்டுரை எனக்கு சங்கடத்தை அளிக்கிறது. குறைந்தது 1000 லிருந்து 1500 வரையாவது போய்கொண்டிருக்கிறது என்று நினைத்திருந்தேன்.

இதற்குமுன் ஒரு கடிதம் எழுதியிருந்தேன். பதில் இல்லை 
 
 
அன்புள்ள சுரேஷ்

பொதுவாக நம் நாட்டில் புத்தகங்கள் அதிகம் வாங்கப்படுவதில்லை. பல பிரச்சினைகள்; முதலில் வீட்டுக்காரர்களைச் சொல்லிச் சமாளிக்க முடியாது. வைக்க இடம் இல்லை. நடுவே இவ்வளவு விற்பதே ஆச்சரியம்தான்

ஜெ