Wednesday, May 13, 2015

கரிய உலோகம்



ஜெ

வெண்முகில் நகரம் எல்லாம் நல்படியாக முடிந்து சுமுகமாக நிறைவை எய்திவிட்டது. ஆனால் மகாபார்தக்கதையைத் தெரியாமல் வாசிப்பவர்களுக்கேகூட அதிலுள்ள உண்மையான வன்மங்கள் எல்லாம் அப்படித்தான் இருக்கின்றன என்று தெரியும். தன்னையும் பிள்ளைகளையும் கொல்ல திருதா முயற்சிசெய்தார் என்று இன்னமும் குந்தி நினைக்கிறாள். தன் மகன் ஆட்சி செய்யவேண்டும் என்று காந்தாரி நினைக்கிறாள். தானே பார்தவர்ஷத்தின் சக்கரவர்த்தினி என்று திரௌபதி நினைக்கிறாள். இந்த வன்மங்களெல்லாம் இருக்கும்போது அமைதி வரப்போவதே இல்லை

இந்த வன்மத்தின் குறியீடாகத்தான் இங்கே இரும்பு வருகிறது. நம்மூர் கதைகளில் ஆயுதங்களைக்கூட பொன்னிறத்தில் அமைக்கிறார்கள். நல்ல கருப்பு நிறத்தில் அமைத்தால்தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்

சாமிநாதன்