Friday, May 8, 2015

நெசவு




ஜெ,

நலம்தானே?

அடுத்த நாவல் அறிவிப்பு இன்னும் வரவில்லை. எதிர்பார்க்கிறேன்.

இதுவரை வந்த வெண்முரசின் texture ஒரு தனிச்சிறப்பு கொண்டது. நேராகப்போகிறது மகாபாரதக்கதை. அந்த நேர்கோட்டிலேயே இணைக்கப்பட்டுதான் அசல் மகாபாரதத்திலே குட்டிக்கதைகளும் வருகின்றன. அதவாது ஒரு நதியிலே படகுகள் போவதுபோல குட்டிக்கதைகள் மையக்கதையிலே போகின்றன.

ஆனால் வெண்முரடில் அந்த தனிக்கதைகள் எல்லாம் அந்த மையக்கதைக்கு குறுக்காகவெட்டிச்செல்லுகின்றன. ஒரு weaving நடக்கிறது. குட்டிக்கதைகள் மையக்கதைகளுக்கு நேர்மாறான அர்த்தம் அளிக்கின்றன. மையக்கதையை மேலும் விரிவாக விளக்குகின்றன. வேறு இடங்களுக்குக்கொண்டுபோகின்றன

இப்படிக் கதைகளை நெய்து ஒரு பெரிய பரப்பை உருவாக்குவதுதான் இந்நாவலின் பெரிய வலிமை. இது ஒரு கிளாஸிக் ஆகிறது இதனால்தான். ஆனால் பழைய கிளாஸிக்குகளில் குட்டிக்கதைகள் இப்படி குறுக்குநெடுக்காகப் பின்னப்பட்டிருப்பதில்லை அதனால்தான் இது ஒரு post modern classicism ஆக இருக்கிறது

இந்த அம்சத்தைக்கவனிக்காமல் எவரும் இந்நாவலைப்பற்றி உருப்படியாக ஒன்றையும் சொல்லிவிடமுடியாது என்று நினைக்கிறேன்

சண்முகம்