Saturday, May 9, 2015

அன்றாட நுட்பங்கள்



அவன் குதிரையை இலக்கின்றி திருப்பியபோது அது வால்தூக்கி சாணிபோட்டது. அதன்மேலேயே சிறுநீர் கழித்தது. இயல்பாக ஓர் அகக்காட்சிபோல குதிரைச்சாலையில் இருப்பதை அவன் உணர்ந்தான்.

அந்தக்காட்சியை நான் முதலில் எளிமையாகக் கடந்துபோய்விட்டேன் ஜெ. அதன்பிறகு எப்போதோ அதை மனதுக்குள் ஓட்டியபோதுதான் அதன் முக்கியத்துவமே தெரிந்தது. கர்ணன் எங்கே இருக்கக்கூடும் என்று நினைத்துக்கொண்டே போகிறான் பூரிசிரவஸ். அப்போது குதிரை சாணிபோடுகிறது. மாடு வளர்ப்பவர்களுக்குத்தெரியும் சாணியும் மூத்திரமும் கலப்பது தனி வாசனை. அதுதான் தொழுவத்தின் வாசனை.

அந்தவாசனை வந்ததுமே அவனுக்கு கர்ணன் குதிரைலாயத்திலே இருப்பான் என்று தோன்றிவிடுகிறது. ஆச்சரியமான விஷயம் இது. ஏனென்றால் இது எல்லாருடைய வாழ்க்கையிலும் நடப்பது. மணங்கள் நினைவுகளைக் கொண்டுவருகின்றன. நினைவுகளை ஒரு படமாக ஆக்கியதுமே எல்லாம் தெளிவாகப் பார்க்கமுடியும்

illogical ஆக ஒரு கண்டுபிடிப்பை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை அழகாகச் சொல்லிய இடம் அது. ஆனால் இரண்டே வரிகளில் போய்விடுகிறது. பெரும்பாலும் யாருமே வாசித்திருக்கமாட்டார்கள். இப்படித்தான் இந்த நாவலின் உடல் அமைந்திருக்கிறது. இத்தனை நுட்பமாக. இதை வாசித்து முடிக்கமுடியாது என்று நினைக்கிறேன்

சாமிநாதன்