Tuesday, May 12, 2015

அண்மையில் இருப்பவர்கள்

 
 
அன்புள்ள ஜெ
       உங்களின்  வரிகளைத்தான் கீழே  கொடுத்து உள்ளேன். 
(என் இணையதளத்தில் தொடர்ந்து வாசகர் கடிதங்கள் எழுதும் வாசகர்களில் பலர் ஒருகட்டத்தில் நின்றுவிடுவதுண்டு.அவர்களில் மிகச்சிலரே என்னிடமிருந்து விலகிச்சென்றுவிட்டவர்கள் என்று நான் அறிவேன். பிறர் தொடக்கநிலையில் எழுதிய கடிதங்களில் இருந்து மேலெழுந்து விட்டவர்கள். கேட்பதற்கும் சொல்வதற்கும் ஏதுமில்லாத நிலையில் என் எழுத்துக்களுடன் மட்டும் மானசீக உறவுள்ளவர்கள்).

   கேட்பதற்கும் சொல்வதற்கும்  ஏதும் இல்லாத  வாசகர்கள் என்று  பொதுவில்  சொல்லி விட்டீர்களே , வருத்தம்தான் , உங்களின் வார்தைகள் எங்களை  உங்களிடம் இருந்து  பிரித்து  செல்கிறது , ஒரு வாசகியாக  உங்கள்  எழுத்துகளுக்கு  எதிர் வினையாற்றாமல் இருந்து இருக்கலாம் ,  அதற்க்கு காரணங்களும்  இல்லாமல் இருக்காது , உங்களின் வாசகர்களை நீங்கள் பிரித்து பார்காதீர்கள் என்பதே என் போன்ற வசகியரின் வேண்டுகோள் ,
 
  ஒரு காலகட்டத்தில்  ஜெயகாந்தன்  எனும் ஆளுமை , எப்படி  சமுகத்தின் மனசாட்சியாக,  தனது எழுத்துக்களால்  கம்பீரமாக  எழுந்து  வந்தாரோ , அப்படி தற்பொழுது உங்களின் எல்லா எழுத்துகளும்  கட்டுரையாகட்டும் , கதைகளாகட்டும் , விவாதங்களாகட்டும் 
 
அனைத்தையும் ஒரு  கூட்டம்  உள் வாங்கி  வாழ்கையில்  பயன் அடைந்து கொண்டுதான் 
உள்ளது . அவர்களை  எந்த  குழுவிலும் உங்களால் சேர்க்க முடியாது  காரணம் , அவர்கள் தங்களை வெளிப்படுத்துவதே  இல்லை ,
ஹேமா 

அன்புள்ள ஹேமா

அவர்கள் பிரித்துப்பார்க்கப்பட்டவர்கள் அல்ல. எழுதாமல் பேசாமலிருக்கையிலேயே அண்மையில் இருக்கிறார்கள் என்ற பொருளில்தான் அவ்வாறு சொல்லப்பட்டது

ஜெ