Wednesday, May 6, 2015

குந்தி கேட்காத இசை



ஜெ

காந்தாரியின் மடியில் கால்வைத்து அமர்ந்து குழலிசை மீட்டுகிற கிருஷ்ணனைப்பார்த்து மனம் நெகிழ்ந்தேன். அந்தக்காட்சியே தெய்வீகமாக இருந்தது. காந்தாரியின் படுக்கையில் அவள் தலையணையை தன் முதுகுக்கு வைத்து கண்ணன் அமர்ந்திருக்கிறான்

ஆனால் ஆச்சரியம் என்னவென்றால் அவனுக்கு அவனுடைய சொந்த அத்தை குந்தியிடம் இந்த நெருக்கம் இல்லை. அவளைக் கொஞ்சுகிறான். தாஜா செய்கிறான். அவள் ஒரு இறுக்கத்துடனேயே இருக்கிறாள். அவள் நெருங்கி வரவேயில்லை

இந்தவேறுபாடு  முக்கியமானது. காந்தாரி அம்மாவாக இருக்கிறாள். ஈகோ இல்லாமல் சுயசமர்ப்பணம் பண்ணுகிறாள். அவளை அம்மாவாக உரிமையுடன் ஏற்றுக்கொள்கிறான்

ஆனால் குந்திகு நிறைய ராஜீயக் கணக்குகள் இருக்கின்றன. அதெல்லாம் இருப்பதனால் அவளுக்கு ஒரு இறுக்கம் இருக்கிறது. ஆகவே கண்னெதிரே குழலேந்தி அவன் வந்தபோதும் புரிந்துகொள்ள முடியவில்லை.

குந்திக்கு அந்த இசையை அவன் வாசித்துக்காட்டவேயில்லை இல்லையா?

சாமிநாதன்