Sunday, May 10, 2015

காண்டவதகனமும் நாட்டார்கலைகளும்




அன்பு ஜெயமோகன்,
      
 காண்டவ வனப் புராணநிகழ்வை புரிசை கண்ணப்பதம்பிரான் கூத்தாக நடத்தினார் என்றும், ந.முத்துச்சாமி அவர்கள் திருவேங்கடம் என்பவரோடு இணைந்து ”காண்டவ வன தகனம்” எனும் கூத்து நாடகத்தை எழுதி இருக்கிறார் என்றும் இணையத்தில் படித்தேன். அக்கூத்து குறித்த மேலதிகத் தகவல்கள் இருப்பின் பகிர்ந்து கொள்ளுங்களேன்.

முருகவேலன்

அன்புள்ள முருகவேலn

காண்டவதகனம் இந்திய நிகழ்த்துகலை வரலாற்றில் முக்கியமானது. அனேகமாக எல்லா நாட்டார் கலைவடிவங்களிலும் காண்டவதகனத்தின் கதை உள்ளது.பல்வேறு வடிவங்களில். ஈழத்து மோடிக்கூத்து வடிவில் உள்ளது. அதை நவீன நாடகவடிவமாகவும் ஆடுகிறார்கள்
 http://www.kalaikesari.lk/article.php?category=features&num=582