Thursday, May 7, 2015

நாகமும் பருந்தும்




நாகத்தை பற்றித் தூக்கிப் பறக்கும் பருந்து எடைமிகுந்தால் உகிர்தளர்த்தி அதை விட்டுவிடும். ஆனால் சிலநேரங்களில் நாகம் அதன் கால்களைச்சுற்றிவிடும். சிறகு தளர்ந்து இரண்டும் சேர்ந்து மண்ணில் விழுந்து இறக்கும்.

வெண்முகில்நகரத்தின் கடைசி அத்தியாயம் சுருக்கமாக இருந்தாலும் முக்கியமான குறிப்புகளை அளித்து ஒட்டுமொத்த நாவலையும் ஒன்றாக்கிவிட்டது.

நாட்டைப்பங்குபோட்ட குற்றவுணர்ச்சியை வெல்லத்தான் அத்தனை நெகிழ்ச்சி என்று சாத்யகி சொல்லும் இடம் ஒன்று. அவன் அப்படிப்பட்டவன் அவனுக்கு ஒரு ரொமாண்டிசிசமும் இல்லை. நேரடியான மனுஷன் .அவன் உடனே யதார்த்தத்தைக் கண்டுபிடிப்பான். சொல்லிவிடுவான். அந்த வெளிப்படைத்தன்மை தெரிகிறது

பெண்களைப்பிடித்துக்கொண்டிருப்பதும் பெண்களால் பிடிக்கப்படுவதும் அழிவை அளிக்கலாம் என்பதை சுட்டிக்காட்டுவதற்காக சாத்யகி சொல்லும்கதை கௌரவர்களும் பாண்டவர்களும் மாறிமாறிப்பிடித்துக்கொண்டிருப்பதையும் சொல்வது போல உள்ளது

சுவாமி