Wednesday, May 13, 2015

செம்பதிப்புகள்

அன்புள்ள ஜெ,

        வணக்கம்.முந்நூறு பேர் பற்றி எழுதியிருந்தீர்கள்.

     


   புத்தகத்தை வாங்காதவர்களில் நானும் இருக்கிறேன்.கடந்த ஓராண்டாக பணியிட மாறுதலால் நான்,கணவர்,பிள்ளைகள் வெவ்வேறு இடங்களில் இருக்கிறோம்.உண்மையில் எனக்கு சரியான முகவரி இல்லை.வாடகை வீடுகள்.வாரத்தில் மூன்று இடங்களில் இருந்தேன்.அதனால் தான் புத்தகம் ஆர்டர் பண்ணவில்லை.முதற்கனல்,மழைப்பாடல் புத்தகக்கண்காட்சியில் வாங்கினேன்.

        மத்த புத்தகங்களின் செம்பதிப்பு இப்பொழுது கிடைக்குமா?
தெரியப்படுத்தவும்.

மோனிகா மாறன்.

அன்புள்ள மோனிகா

அனைத்துச்செம்பதிப்புகளும் கிழக்கு பதிப்பகத்தில் ஆர்டரின்பேரில் கிடைக்கும். on demand முறையில் அச்சிட்டு அளிப்பார்கள். பிரயாகை கிழக்கிலும் வண்ணக்கடல் நற்றிணையிலும் இப்போது விற்பனையில் உள்ளது

ஜெ