Saturday, May 9, 2015

சாத்யகி பூரிசிரவஸ் பகை

வணக்கம்,sir.

உங்களுக்கு இது என்னது முதல் மின்னஞ்சல்,வெண்முரசை தவறாமல் படித்து வருகிறேன்.

ஒரு சந்தேகம் என்னக்கு தெரிந்தவரையில் வசுதேவர்-தேவகி திருமணம் காரணமாக ஷினி-சோமதத்தர் முதற்கொண்டே சாத்தியகிக்கும்,புரிசரசுக்கும் குல பகை இருந்துவந்தது.ஆனால் வெண்முரசில் சத்யகி முதல்முறையாக பூரிசிரசை  திரௌபதி சுயவரத்தில் எதேச்சையாக பார்ப்பது போல அமைந்துள்ளது.உண்மையில் மஹாபரதத்தில் இப்படி உள்ளதா?விளக்கம்கிடைத்தால் மகிழ்வேன்.


இப்படிக்கு
குணசேகரன்
 
அன்புள்ள குணசேகரன்,

 
 
 
மகாபாரதத்தில் சாத்யகி, பூரிசிரவஸ் இரு கதாபாத்திரங்களும் மிகச்சிறிய ஆளுமைகள். அவர்களின் கதைகளும் விரிவாக இல்லை. போரில்தான் அவர்கள் உண்மையில் கதாபாத்திரங்களாகவே நிறுவப்படுகிறார்கள். வெண்முரசு அவர்களை முன்னரே பெரிய கதாபாத்திரங்களாக நிறுவிச்செல்கிறது.

சாத்யகி பெரிய கதாபாத்திரமாக ஆவது ஹரிவம்சம், பாகவதம் முதலிய பிற்கால நூல்களில். அந்தப்பகைமையும் எல்லாம் பின்னால் எழுதப்பட்டவை. மகாபாரதத்தில் சோமதத்தர் பெயர்மட்டுமே வரும் கதாபாத்திரம்.
 
அவை இந்நாவலிலும் வரும். ஆனால் பின்னர். இப்போது சோமதத்தர் தேவகியை விரும்பி ஒரு பூசல் நிகழ்ந்ததெல்லாம் இருவருக்கும் தெரிந்திருக்க வழியில்லை. இருநாடுகளும் இருவேறு எல்லைகளில் உள்ளவை., 

வெண்முரசை வாசிக்கும்போது அக்கதைகள் அமைந்துவருவது எப்படி என கொஞ்சம் பொறுமையாகக் காத்திருக்கலாம்
 
ஜெ