Thursday, May 7, 2015

நகரம்


 [பெரிதாக்க படத்தில் சொடுக்கவும்]

ஜெ

இந்திரப்பிரஸ்தத்தைக் கண்ணிலே காட்டுவீர்கள் என்று நினைத்தேன். கற்பனையிலேயே பார்த்துக்கொண்டால் போதும் என்று விட்டுவிட்டீர்க்ள் என நினைக்கிறேன். முகில்கள் உரசிச்செல்லும் ஒரு நகரம் என்பதே அற்புதமான கனவாக இருக்கிறது. அப்படி ஒருநகரம் யமுனைக்கரையிலே அமைய முடியாது. ஏனென்றால் அது சமவெளி. அங்கே குன்றே இல்லை. ஆனாலும் அந்தக்கற்பனைதான் அழகாக இருக்கிறது

திரௌபதியின் கதை இது. அவளுடைய நகர்நுழைவிலே அது முடிந்திருப்பதிலே உள்ள அந்த ஓர்மை மனநிறைவை அளிக்கிறது. எல்லா நாவலும் ஒரு துக்கத்திலும் சோர்விலும் முடிந்தன. மழைப்பாடல் முடிந்தபோது எனக்கு அழுகைதான் வந்தது. ஆனால் இது அப்படி இல்லாமல் மங்கலமாக மகிழ்ச்சியாக முடிந்திருக்கிறது

அதிலே எல்லா சூசகங்களையும் வைக்கிறீர்கள். சார்வாகன். தீர்க்கசியாமன் அந்த கைவிடுபடைகள். எல்லாமே ஒரு எச்சரிக்கையைத்தான் கொடுக்கின்றன. ஆனாலும் அந்த விழா மனசுக்கு நிறைவைத்தான் அளித்தது

ரவிக்குமார்