Sunday, May 17, 2015

விதியின் கருவி



ஜெ





வெண்முரசை வாசித்துக் கொண்டிருக்கும்போது எனக்குத்தோன்றக்கூடிய ஒன்று இருக்கிறது. நான் விதியையே கண்முன்னால் வாசித்துக் கொண்டிருக்கிறேன். கொள்கைகள் உணர்ச்சிகள் என்று என்னதான் பேசினாலும் கதையிலே பெரியதாக எழுந்து நிற்பது என்றால் அது விதிதான் இல்லையா? விதியைத்தான் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். ஒவ்வொருவரும் விதியைக் கடந்துபோ வதற்காக ஆனமட்டும் உழைக்கிறார்கள். ஆனால் விதிதான் ஜெயிக்கிறது

விதியின் கையிலே ஒரு ஆயுதமாகத்தான் கிருஷ்ணன் வந்திருக்கிறா. அவன் கையைக்கட்டிக்கொண்டு நிற்கும் காட்சியில் எல்லாம் ஒரு மனப்பதைப்புதான் எனக்கு வந்தது. ஒன்றுமே செய்யமுடியாது என்று அவனே சொல்லிவிடுவதுபோலத் தோன்றியது.

ஜெயலட்சுமி