Friday, May 8, 2015

குந்தியும் மருமகளும்



ஜெ

வெண்முகில்நகரத்தில் கடைசியில் குந்தியைப்பற்றி வரவில்லை. திரௌபதி நகர்புகுதல் அவ்வளவு ஆர்ப்பாட்டமாக நடக்கிறது. ஆனால் குந்தி முதலில் யாதவ அரசியாக வந்தபோதும் பெரிய வரவேற்பு இல்லை. அவள் அதற்காக ஆசைப்படுகிறாள். ஆனால் பின்னர் அவள் பத்து வருஷம் காட்டுக்குப்போய் திரும்பிவந்தபோதும் வரவேற்ப் இல்லை. திரௌபதிக்குக்கிடைக்கும் இந்த வரவேற்பை அவள் எப்படி எதிர்கொள்வாள் என்பது ஒரு பெரிய கேள்வி

திறமையாக அந்த வேறுபாட்டை அமைத்து வாசகனின் ஊகத்துக்கே விட்டிருக்கிறீர்கள். அரசிபோல நகரத்துக்குள் நுழையவேண்டும் என்று காத்துக்கிடந்த குந்திக்கும் திரௌபதி அரசர்களால் வரவேற்கப்படுவதற்கும் நடுவே உள்ள வேறுபாடு

இதெல்லாம் குந்தியின் மனதிலே என்னமாதிரியான விளைவுகளை உருவாக்கும் என்பதை நினைத்துப்பார்க்கமுடிகிறது. இந்தவகையான நுணுக்கமான மனோதத்த்வ விஷயங்களுடன் இது காழ்ப்பு நிறைந்த கரிய உலோகமான இரும்பு எழுந்துவரும் காலகட்டம் என்பதும் இணைந்துகொள்கிறது

இந்தமாதிரியான குறிப்புகள் வழியாக நாம் அறியும் மகாபாரதம் வேறுவகையானதாக இருக்கிறது

சண்முகசுந்தரம்