Friday, May 8, 2015

வெண்முகில்நகரம் சுருக்கம்



அன்புள்ள ஜெமோ

வெண்முகில்நகரம் வந்துகொடிருந்தபோது அதை உண்மையில் தொகுத்துப்பார்க்க முடியவில்லை. அந்தந்த அத்தியாயங்களின் நுட்பங்களிலேயே மனசு ஓடிக்கொண்டிருந்தது. ஆகவே முடிந்தபின் ஆங்காங்கே போய் புரட்டிப்புரட்டி வாசித்துத் தொகுத்துக்கொண்டேன்

வெண்முகில்நகரம் பாஞ்சாலியின் மனம் வழியாகத் தொடங்குகிறது. புலோமையின் கதை பாஞ்சாலியின் மனம். புலோமைக்கும் புலோமனுக்குமான அங்கே சொல்லப்பட்டதை கடைச்யில் பானுமதியே சொல்கிறாள். பூரிசிரவஸிடம்

பாஞ்சாலியின் கனவுக்குள் போகும் ஐந்து கணவர்களையும் காட்டுகிறது நாவல். ஐந்துபேரும் அவளுடைய ஐந்து கனவுகளுக்குள்ளே செல்கிறார்கள். ஒட்டுமொத்தமான அவளுடைய கனவு இந்திரப்பிரஸ்தம் அதுக்குள் போகிறவன் கிருஷ்ணன் மட்டும்தான்

அந்தக்கனவைச் சொன்னபின்னர் பிற இளவரசிகளுக்குள் கதை பூரிசிரவஸ் சாத்யகி ரெண்டுபேர் வழியாகச் செல்கிறது. அவர்களின் முரண்பாடும் ஒரு தனிக்கதையாக ஓடுகிறது

இந்திரப்பிரஸ்தம் அமைப்பதற்காக பாஞ்சாலி அஸ்தினபுரியை உடைத்து பாதிச்செல்வத்தையும் மக்களையும் எடுத்துக்கொள்வதிலே நாவல் முடிகிறது

நடுவே பாண்டவர்களின் கதையும் வந்துகொண்டிருக்கிறது. இதை பாஞ்சாலியின் கதை என்ரு சொல்லிவிடமுடியும்

செல்வராஜ்