Thursday, May 7, 2015

கருடனும் நாகமும்




அன்புள்ள ஜெ

வெண்முகில்நகரத்தின் ஒட்டுமொத்தத்தை நினைத்துப்பார்க்கும்போது ஒரு பெரிய நாவலாகவே நினைக்கமுடிகிறது. திரௌபதியின் பிறப்பு முதல் நகர்நுழைவுவரைக்கும் ஒன்றாக ஒரே கதையாக உள்ளது. இரண்டுநாவல்களாகப் பார்க்கவேண்டியதில்லை என்று தோன்றுகிறது. இந்தப்பிரிப்பை பக்கவசதிக்காகவே செய்திருப்பீர்கள் என்று தோன்றுகிறது

நீலம் வந்துகொண்டிருந்தபோது இதுதான் உச்சி என்றும் இனிமேல் போகமுடியாது என்றும் நினைத்தேன். இப்போது அந்த உச்சியைக் கடந்துவிட்டதாகத் தோன்றுகிறது. இத்தனைக்கும் பிரயாகையும் வெண்முகில்நகரமும் சுத்தமாக வேறுமாதிரி இருக்கின்றன. இவற்றிலிருப்பவை வேறுவகையான கதைகள்

கடைசியில் அந்தப்பருந்து பாம்பு உவமை அற்புதமானது. உண்மையிலே மகாபாரதமே அங்கேதான் தொடங்குகிறது. பாம்புகளை கருடன் தூக்கிக்கொண்டுபோவதில் இருந்து.  அவற்றை கருடன் விட்டுவிட்டது. பிறகு அதே கதையை பாண்டவர்க்ளுக்கும் கௌரவர்களுக்குமான உவமையாக குந்தி சொல்கிறாள். அதே கதை மீண்டும் இங்கே வந்திருக்கிறது

இந்த குறியீடுகள்தான் வெண்முரசை வேறு லெவலுக்குக்கொண்டுசெல்கின்றன

சாமிநாதன்