Wednesday, March 16, 2016

வெய்யோன் நிழல்


அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
வணக்கம்,வெய்யோன் தொடக்கத்திலிருந்து கர்ணன் தனது வாழ்க்கை முழுதும் பிறரின் கட்டளைக்கும்,வேண்டுகோளுக்குமே வாழ்கிறான்,தாய் தந்தைக்காக விருஷாலியை மணக்கிறான்,நண்பனுக்காக சுப்ரியையை மண்க்கிறான்,
நாட்டுமக்கள் அவனை மன்னனாக ஏற்க தயங்குகின்றனர்,மனைவியர் அவனை தலைவனாக ஏற்காமல் தம் இஷ்டத்திற்க்கு அவனை மாற்ற முயல்கின்றனர்,அவனுக்கு சிறிது விடுதலையும் அன்பும் கிடைப்பது இளைய கௌரவர்களிடமும்,அவர்கள் குழந்தைகளிடமும், தான், துரியோதனன் முதலான கௌரவர்கள் அவனை முழுதும் அறியாதவர்கள்(கௌரவர்கள் யாரும் கர்ணனின் கவச குண்டலங்களை கண்டதில்லை),கர்ணனிடம் அன்புகாட்ட முயல்கிறாள் குந்தி அதை அனுதாபமாய் எண்ணி அவளை புறக்கணிக்கிறான் கர்ணன்,அவனை முதல் முறையாக முழுதும் அறிந்தவர்கள் நாகர்களே அவனை தங்கள் தலைவனாக முழுதும் ஏற்க்கின்றனர்,அவன் வாழ்னாள் முழுவதும் வேண்டிய 
அன்பும் மரியாதையும் நாகர்களிடமிருந்து அவனுக்கு கிடைக்கிறது அதனாலே அவர்களுக்காக வஞ்சம் தீர்க்க போகிறான் கர்ணன்.
 அடுத்தது அங்கத நாடகம் அதில் வரும் மெய்யியல் கருத்துக்கள் அதை வெரும் ஏட்டு கல்வியாக படித்தால் ஒரு சோர்வே வரும் "என்ன இதுல பெருசா இருக்கு?"என்று எண்ண தோன்றும்,அதையே அனுபவரிதியாக புரிந்து
interest எடுத்து படித்தா "அஹா ஓஹோ "என்று எண்ணம் தோன்றும் ,எந்த இரண்டு வகையினருக்கும் எற்றாற்போல அமைத்திருந்தது அங்கத நாடக பகுதி,காண்டவ எரிப்பையே ஒரு miniகுருச்ஷேத்திரம் போர் போல
ஆக்கிவிட்டீர்கள்,கண்ணனின் கீதாவுபதேசம், அர்ஜுனனின் தயக்கம் பின் போர் என்று.அங்கத நாடகத்தில் சொல்லபடுவது வென்றவர்களின் புராண கதை, முது நாகர் கர்ண்னிடம் சொல்வது வீழ்ந்தவர்களின் சோக வரலாறு.
 ஜராசந்தன் ராஜசூயத்திற்க்கு முன்னே கொல்லபடுவானே என்ற ஐயம் இருந்தது மயனீர்சபையில் வைத்து அவனை இரண்டாக பிளந்து வீட்டீர்கள்,அங்கேயே சிசுபால வதத்தையும் நடத்திவிட்டீர்கள்.ஜரசந்தன் இரு பகுதியாய்பிறந்தவன் என்று சொல்வதை ஒரு குறியீடாக மாற்றிவிட்டீர்கள்,அவன் ஒருபுறம் மரம் ஏறிகுதிக்கும் காட்டு சிறுவன் மறு புறம் ஒரு சிறந்த அரசன்,ஒருபுறம் கீழ்தரமாக பேசுபவன் இன்னோறு புறம் வேதாந்தம் பேசுபவன்,என்றுஅனைத்திலும் இரண்டு extreme எல்லையிலும் நின்று யோசிப்பவன்,எந்த ஒரு விஷயமானாலும் இரு கூறாக பிரித்து அதை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருபவன்(உடலை இரணாடாக பிய்த்து போட்டு ஒன்றாக ஆகிக்கொள்பவன்)மயனீர் மாளிகையில் நடப்பது ஒன்றும் அவனுக்கு புரியவில்லை இரண்டாக பிரியும அவன் உடல் ஒன்றாக சேரவில்லை ,மாயசபை நிகழ்வுகள் அவன் தர்க்க அறிவுக்கு உடன்படவில்லை,அதனாலே யவன மதுவில் எதோ 
கலந்துள்ளனர் ,காற்றில் எதோ கலந்துள்ளாது,வெளியே விசைஉள்ளது என்று எதோ எதோ கூறி தன் தர்க்க அறிவை சமாதனப்படுத்த முயல்கிறான்.
 மாயசபையில் அவரவர்களின் ஆசைகளும்,விரோதங்களும் வெளிப்படும் அவர்களிம் மனம் ,அதில் வராத இருவர் கண்ணனும்,தருமனும்.கண்ணன் அனைத்தையும் செய்துக்கொண்டு அதிலிருந்து விலகி நிற்க தெரிந்த
யோகி,தருமன் வஞ்சம் போன்றவற்றில் ஈடுபடாதவன்.
துரியோதனன் மாயசபையில் திரௌபதி துகிள் உரியபடுவதை கண்டிருப்பானோ?அதலே தன் குற்றவுணர்வர் தவிர்க்க அவளிடம் பேசவிழைகிறானோ?
இப்படிக்கு
குணசேகரன்