Tuesday, March 1, 2016

ஆக்கமும் அழிவும்






அன்புள்ள ஜெ சார்

வெய்யோனின் முடிவுப்பகுதிகள் என நினைக்கிறேன். கர்ணனிடம் சொல்லப்படும் நாகர்களின் கதைகள் நெஞ்சில் துக்கத்தை நிறைக்கின்றன. ஆக்கமும் அழிவும் இருபக்கங்கள் என்பது மகாபாரதத்தின் செய்தி. எளிமையான மிடில்கிளாஸ் மனநிலையைக்கொண்டு எதையும் புரிந்துகொள்ளமுடியாது என்பதும் அறிவேன். இருந்தாலும் இந்த அழிவு மனம் பதைக்கவைக்கிறது

ஷத்ரியர் பழங்குடிகளை வென்று அழித்தனர். ஆனால் அதன்பின்னர் அவர்களுக்கே அந்த அழிவு வந்தது. அந்த அழிவு நாகர்கள் நுண்வடிவத்தில் கொண்டுவந்த அழிவு. அந்தச் சமநிலைதான் ஆச்சரியமானது என நினைக்கிறேன். நாகர்களின் அழிவு பல பகுதிகளாக அடுக்கடுக்காக வந்துகொண்டே இருப்பதை வாசித்து ஒரு தனி வரலாறாகத் தொகுத்துக்கொள்வது பெரிய ஒரு கற்பனைதேவையான செயல்பாடு என நினைக்கிறேன்

சாமிநாதன்