Monday, March 14, 2016

படிமங்கள்






ஜெ

வெண்முரசிலிருந்து வெளியே போகமுடியாத நிலை. இரண்டு ஆண்டுகளாக அப்படியே பழகிவிட்டது. ஆகவே வெண்முரசின் பழையநாவல்களை வாசித்துக்கொண்டிருக்கிறேன். முக்கியமாக இந்திரநீலத்தை. அதைத்தான் சரியாக வாசிக்கவில்லையோ என்று ஒரு சந்தேகம். அதைவாசிக்கையில் நீலத்தின் மனநிலை இருந்துகொண்டே இருந்தது. நீலம் முழுக்கமுழுக்க பக்திநோக்கும் பரவசமும் கொண்டது. இந்திரநீலம் ஒரு blend. அந்த கலப்பை புரிந்துகொள்ளாமல் வாசித்துவிட்டேனோ என சந்தேகம் வந்தது

பல metaphors ஐ நான் முதலில் கவனிக்கவில்லை. ருக்மிணியைத் தூக்கிவரும்போது சுழன்றுவரும் ஆறும் ஒரு சக்கரமாக ஆவது ஓர் உதாரணம். அவர்கள் அஷ்டலட்சுமிகள் என்பது கடைசியில்தான் தெரிந்தது. இப்போது அதைத்தெரிந்துகொண்டே மீண்டும் வாசிக்கையில் புதியபுதிய அர்த்தங்கள் வந்தபடியே இருக்கின்றன

அர்ஜுனன் தன் பெண்களை மரம் மேல் ஏறி பூப்பறிப்பதுபோல பறிக்கிறான். கிருஷ்ணனுக்குப் பெண்கள் கனிந்து கையில் வந்து விழுந்துகொண்டே இருக்கிறார்கள்

செந்தில்