Monday, March 7, 2016

நாக வஞ்சம்







ஜெ

நாகங்களின் கதையின் உச்சம் கிரஹணம்தான். நாகு சூரியனைக் கவ்வுகிறது. அஸ்வசேனன் என்னும் நாகம் வெய்யோன் மகனைக் கவ்வுகிறது. இருள்விலகி அவன் ஒளியுடன் விரியும் இடம் மிகமிகக்கவித்துவமானது.

நாகங்களின் கதையாக வெண்முரசை பலர் எழுதியிருந்தனர். நாகங்கள் காமத்தின் அடையாளம் என்றால் இது காமத்தின் கதை. வஞ்சத்தின் கதை. காமகுரோதமோகங்களின் கதையாகவே எந்த பேரிலக்கியமும் இருக்கும்

அப்படிப்பார்த்தால் துரியோதனன் என்னும் வஞ்சமே உள்ளே உறைந்த காமத்தால்தான் என்று தோன்றுகிறது. மாயமாளிகையில் அவன் பார்த்தது அதைத்தானே?

மகாதேவன்