Monday, March 14, 2016

சமநிலை





ஜெ,

வெண்முரசு நாவல்களில் சமநிலை என்பது எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனித்தேன். நாவலில் அர்ஜுனனுக்கும் கர்ணனுக்கும் ஒருவகையான சமநிலை உள்ளது. அதெல்லாம் போரில். முழுக்கச் சமநிலை உள்ள உடல் இருவருக்குத்தான். பாஞ்சாலிக்கு அது இயற்கையாகவே உள்ளது. அவளுக்குத்தான் சஞ்சலமே இல்லை. அவள் உடல் துலாக்கோல் போல இருப்பதாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறது வெண்முரசு

இன்னொரு சமநிலை துர்யோதனனுக்கு. அது அவன் ஸ்தூனகர்ணனிடம் அடைந்த வரம். அதன்பின் அவன் இரக்கமற்ற அழகனாக ஆகிவிட்டான். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவனை அதன்பின்னர் பெண்கள் விரும்புகிறார்கள். எப்படி திரௌபதியை எல்லா ஆண்களும் விரும்புகிறார்களோ அதைப்போல

இங்கே சமநிலை என்பதை inhuman என்றும் ஈவிரக்கமற்றநிலை என்றும் சொல்கிறீர்கள். மகாபாரதத்தின் மையக்கதாபாத்திரமான கிருஷ்ணனுக்கு உடல்முழுமையே இல்லை. அவன் கால்விரல் குறைவுடையது. பின்னர் வேடன் அதைத்தான் தாக்கப்போகிறான் இல்லையா?

மாணிக்கம்