Saturday, March 5, 2016

அவள் ஆடல்






ஜெ

இந்த மாயமாளிகைக்காட்சியிலும் சரி அதற்குப்பின்னாலுள்ள சம்பவங்களிலும் சரி முழுமையாகவே கிருஷ்ணன் விலகியிருப்பதை ஆச்சரியமாகவே பார்க்கிறேன். அதை எப்படி விளக்கிக்கொள்வதென்று தெரியவில்லை. இதெல்லாம் அவன் லீலை என எங்கோ ஒரு வரி வருகிறது. ஆனால் அவன் இதற்குள் இல்லை. ஜராசந்தனே சொல்வதுபோல இந்த மாயங்களை உருவாக்கும் ஆடிகளுக்குப்பின்னால் அவன் மறைந்துநின்றிருக்கிறான்.

அல்லது இப்படித்தோன்றுகிறது. இது கிருஷ்ணையின் லீலை. அவனும் அவளும் ஒன்றே. ஒரே ஆட்டத்தை இரு எல்லைகளில் நின்று ஆடிக்கொண்டிருக்கிறார்கள். இது அவளுடைய மூவ் . இனி அவன் ஆடவேண்டும்

மனோகரன்