Saturday, March 12, 2016

கொடுப்பவன்






ஜெ

வெய்யோன் கொடுப்பவன். அவன் எடுத்துக்கொண்ட தருணம் என்பது துரியோதனன் அவனுக்கு முடிசூட்டியபோது மட்டும்தான். நாகங்களின் கண்ணீரைக் கண்டபோது அவர்கள் கோரியதற்கு ஏற்ப தன் இவ்வாழ்க்கையையும் மறு வாழ்க்கையையும் அவன் அப்படியே எடுத்துக்கொடுத்துவிட்டதைப்போல உச்சம் இன்னொன்று இல்லை. இனி அதற்காகவே அவன் சாகப்போகிறான்.

கர்ணன் துரியோதனனின் பக்கம் நின்றதற்கு இதுவரை புராணங்களை விளக்கியவர்கள் அளித்த விளக்கங்கள் இவைதான்.

1. அவன் இயல்பிலேயே தீமை அம்சம் கொண்டவன்.

2. அவனுக்கு பாண்டவர்கள் மேல் வஞ்சம் இருந்தது

3. அங்கநாடு கிடைத்த நன்றிக்கடன்.

4. பாஞ்சாலிமேல் கொண்ட ரகசியக்காமம்

5. அவனுக்கு அவன் யார் என்று தெரியும் ஆகவே ஏற்பட்ட ஏமாற்றம்

இந்நாவலில் இவற்றை எல்லாம் கடந்து மிக வலுவான விளக்கத்தை அளித்துவிட்டீர்கள். அவ்விளக்கம் மிகமிகக் கச்சிதமாகவும் மகாபாரதத்தின் கட்டமைப்பை ஒட்டியதாகவும் இருக்கிறது.

வெய்யோனின் தனிச்சாதனை இதுவே

சண்முகம்