Saturday, March 5, 2016

இரட்டைத்தலை நாகம்





ஜெ,

ஜராசந்தனின் குணாதிசயம் ஒவ்வொரு வார்த்தையிலும் தெளிந்து வருவதைக்காண ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு விசித்திரமான இரட்டை குணாதிசயம். ஒரு ஆதிவாசி. ஒரு ராஜதந்திரி. ஒரு அறியாச்சிறுவன் கூடவே ஒரு தத்துவ அறிஞன். அவன் தத்துவம் பற்றிச் சொல்லும் வரிகளை ஆச்சரியமாகப் பார்த்தேன். தத்துவம் என்பது அறத்தை வைத்திருக்கும் கலம். கலத்தை கையிலெடுத்தால் அறத்தை எப்படியும் விளக்கலாம் என அவன் சொல்வது அவன் எவ்வளவுபெரிய கிரிமினல் என்றும் காட்டுகிறது

அவனுடைய அந்த நகைச்சுவையும் சிரிப்பும் அவனை விரும்ப வைக்கின்றன. அனைவரும் அவனால் கவரப்பட்டுவிட்டார்கள். ஆனால் அவன் உண்மையில் வேறு ஒருவன் / ஆகவே அவனை அவர்கள் பயப்படவும் செய்கிறார்கள். அவன் இரட்டைத்தலை நாகம்


 



ராம்