Friday, March 4, 2016

மனசாட்சியின் குரல்






அன்புள்ள ஜெ

கிருஷ்ணாபுரம் சிற்பங்களைப்பார்க்கையில் கர்ணன் கையில் பாம்புடன் நின்றிருப்பதைக் கண்டு நாகராஜன் என்று ஒரு அர்ச்சகர் சொன்னார். அதை நானும் நம்பினேன். பிறகுதான் அது கர்ணன் என அறிந்தேன்

கர்ணன் ஏன் நாகராஜன் என்பதை வெண்முரசிலே வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவன் நாகர்களின் நியாயத்தைக் கேட்டான். அவர்களுக்காகத்தான் அவன் நிலைகொண்டான்

அவன் பாஞ்சாலியை வெறுத்து அவமதித்ததுகூட அதற்காகத்தான்.ச் ஷத்ரியர்களுக்குள் எழுந்த மனசாட்சியின் குரல்தான் கர்ணன் என நினைக்கிறேன்

செந்தில்வேல்