Sunday, March 13, 2016

கனிவுக்குமுன்






அன்புள்ள ஜெமோ

வெய்யோன் முடிவுக்குவந்தபின் அதை மீண்டும் ஒருமுறை வாசிக்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் முடிந்ததும் உடனே உள்ளே செல்லத் தோன்றவில்லை. நேராக மழைப்பாடலைத்தான் கையில் எடுத்தேன். அதில் திருதராஷ்டிரனின் திருமணம் சம்பந்தமான பகுதிகளை வாசித்துக்கொண்டிருந்தேன். அது சிறிய தனிநாவலாக இருள்விழி என்ற பேரில் வந்துள்ளது என்பதைக் கண்டேன்.

திருதராஷ்டிரனுக்கு ஒரு குணாதிசயம் இருக்கிறது. மிக எளிதில் ஆணவம் புண்படக்கூடியவனாக இருக்கிறான். தன்னை பிறர் மதிக்கிறார்களா என்று வேவு பார்த்துக்கொண்டே இருக்கிறான். கடுமையான கோபம் வருகிறது. இதெல்லாம் அப்படியே அவர் மகனிடமும் இருக்கிறது. ஆனால் திடீரென்று திருதராஷ்டிரன் தந்தையாகக் கனிந்துவிட்டார்

அப்படி ஒரு கனிவு துரியோதனனிலும் நிகழ்ந்திருக்கும். அதற்கான இடம் அமைந்தது. விதி அதை தவறவிட்டுவிட்டது என நினைக்கிறேன்

ராஜசேகர்