Thursday, March 3, 2016

கண்ணாடியின் சிதறல்



‘வெய்யோன்’ – 74

இதுவரை துரியன் பற்றி சொல்லி கொண்டு வந்த தன்மைகள் அற்புதம். மனம் மிக விரிந்தபடி செல்வது இயல்பாக வந்தபடி உள்ளது. சகுனி சொன்னது போல உணர்வலையின் உச்சத்தில் மிதந்தபடி இருக்கிறது இந்த மெல்லிய சிறகு. பக்குவபட்ட மனம் இளகி அனைவரையும் இறுக்கி கொள்ள தோன்றும் கணங்கள் எல்லோர் வாழ்விலும் உண்டு. அப்படியே இருந்து விடலாகாதா என்று ஏங்க வைக்கும் ஆசை மின்னி மின்னி வெளிச்சம் தந்தபடி இருக்க, உயரே வீசிய கண்ணாடி பாட்டில் மேலே மேலே என சூரியனின் கதிர்களை மின்னியபடி சென்ற பின், ஒரு கணம் அந்தரத்தில் நின்று விட்டு, இனி கீழே இறங்கும்.... அல்லது கண் மூடி முகம் மலர்ந்து ஓடி கொண்டு இருக்கும் போது தடுக்கி வீழ்ந்ததாக அல்லது ஒரு ஊசி முனை அந்த நீர் குமிழி கனவை உடைக்க உள்ளே தன்னுள் ஆழ்ந்து கிடந்த தன் அகம் கொள்ளும் வெறி ... துரியனை நினைத்து மனம் தடதட வென அஞ்சுகிறது

மறுபக்கம் நீண்டவனாகிய வெயொன் நிழல் என தொடர்ந்து , கண் கீழ் இருந்தாலும் உருவம் தெரியாத அந்த விதியின் இயல்பான வலையை அறியமுடியாமல் தவித்து செல்வது வதை...... 
இப்பவும் அந்த பசிய பசை போர்த்திய காடு , இந்திரனின் உலகம் , நீர் சொட்டியபடி மழையுடன் உறவு கொண்டு வெளி தெரியாத அந்த இயற்கை உலகம் - தீயின் நாக்குகளுக்கு இரை ஆனதை ஏற்க இயலாமல் அலமலந்து கிடக்க  / அழிந்த வதை மறக்க முடியமால் இருக்க, துரியனின் இந்த வீழ்தல் நினைத்து கலவரம் கொல்கிறது. 
எழுத்தில் அடித்து வீழ்த்துவீர்கள் என நினைக்கிறேன். பின்பு வறண்டு போய் சில நாட்கள் அலையவும் கூடும் 

லிங்கராஜ்