Sunday, March 6, 2016

எரிதல்



மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். சில விஷயங்கள்.

1) முதற்கனல் -23ல் நாகன் (சங்குகர்ணன்) விசித்திரவீர்யனிடம் காண்டவ வன எரிப்பை பற்றி சொல்கிறான்.

2) வெய்யோன்-69: வருணன் அர்ஜுனனுக்கு தேர் கொடுக்கும் போது சொல்வது ஒரு பக்கம் தத்துவம். மறுபக்கம் கிருஷ்ணன் தேரோட்டியாக அமைந்தால் அவன் முழுமை அடைவான் என்று குறிப்பாக வருகிறது.

3) கர்ணன் தன்னை தாயே கொல்வதை போல் கனவு காண்பதாக பரசுராமரிடம் சொன்னதும், இதற்கு முன்பு(மழைப்பாடல்) குந்திக்கு கார்கோடகன் கர்ணனை காண்பிக்கும் பகுதியும் ஒன்று போல் உள்ளது.

4) காண்டீபம் – 33,34 & 35
அந்த சுனைகளின் இயல்பையும், மனித உடலின் பிராண வாயுக்களின் இயல்பையும் பொருத்தி இருந்தீர்கள்.

நன்றி.

இப்படிக்கு,
சா. ராஜாராம்,
கோவை.