Wednesday, March 9, 2016

வெய்யோன் வடிவம்





ஜெ

வெய்யோன் முடிவுக்கு வந்திருக்கிறது

நாவலின் வடிவத்தை இப்போதுதான் தொகுத்துக்கொள்கிறேன். கொடுப்பவனாகிய கர்ணன் தான் வாங்கிய நகரில் சற்று குறுகி வாழ்கிறான். அந்தக்குறுகலை அவனிடம் உருவாக்கத்தான் அந்தச்சூழலே முயற்சி செய்கிறது. அவனால் அதிலிருந்து தப்பவே முடியவில்லை

அந்த அரண்மனை அவனை குறுக்குகிறது. சிறைபோல. இருவகையில் அவன் மனைவிகள் குறுக்குகிறார்கள். ஒருத்தி அதீத தாழ்வுணர்ச்சியால். இன்னொருத்தி அதீதமான உயர்வுணர்ச்சியால். ரெண்டுபேருமே அவன் கருணையையும் பெரிய தன்மையையும் புரிந்துகொள்ளவில்லை.

அவன் அஸ்தினபுரிக்கு வருகிறான். அது அவனுக்கு ஒரு மீட்பு. அங்கே கௌரவர்களின் பேரன்பில் அவன் விடுதலை கொள்கிறான். ஆனாலும் அது யானையை ஜெயிலில் இருந்து முற்றத்துக்குக் கொண்டுவந்ததுதான்

அவன் நாகர்களின் கதையைக் கேட்கிறான். அவர்களின் வஞ்சத்தை தான் எடுத்துக்கொண்டு மேலே செல்கிறான். அந்தத் தியாகம்அல்லது  கொடை வழியாக அவன் முழுமையாக நிமிர்ந்துவிடுகிறான். அந்த விடுதலையே அவனுடைய இறுதி நிலை

அவன் கொடுப்பவன். எடுத்தபோது உணர்ந்த இழிவை கொடுக்கும்போது வென்று நிறைவு அடைகிறான்

சுவாமி