ஜெ
கர்ணனின் வாழ்க்கையின்
மிகப்பெரிய அவலமே அவன் காலத்தில் ஒன்றுமே இல்லாமல் ஆகிவிடுவதுதான். மொத்த அஸ்தினபுரியுமே
ஒரு தடையம்கூட இல்லாமல் ஆகிவிடுகிறது. அவனுடைய கனவுகள்தான் அவன் வாழ்க்கையின் மறுபக்கம்.
கனவு நிஜமாக நடக்கும்போது நிஜம் கனவாகிவிடுகிறது.அந்தக்கனவுகளில் அவன் எல்லாவகைத் துயர்களையும்
அடைகிறான். எனக்குத்துயர் கொண்டுவா அவமானத்தைக்கொண்டுவா என்று அவன் காலத்திடம் கெஞ்சுகிறான்.
தோல்விக்காக மன்றாடுகிறான். அப்போதுதான் அவனால் மீளமுடியும். தன் ஆற்றல்களை வெளிப்படுத்தமுடியும்.
மகாதேவன்