Monday, April 2, 2018

சாங்கிய யோகம்




அன்புள்ள ஜெ

கர்ணனின் கேள்விகள் அப்படியே பகவத்கீதை சாங்கிய யோகத்திற்குப் பொருந்துவதை நான் முன்பே கேட்டிருந்தேன். கர்ணன் எப்போதும் உலகியல்தளத்தில் நின்று கேள்விகளைக் கேட்பவன்.இதற்கெல்லாம் இங்கே இப்போது என்ன பதில் என்றுதான் அவன் கேட்கிறான். அந்தக்கேள்விக்கான பதிலை சாங்கிய யோகத்திலேயே கிருஷ்ணன் சொல்லிமுடித்துவிட்டுத்தான் மேலும் கேள்விகளுக்கு பதில் சொல்லச் செல்கிறார்.

நடைமுறை வாழ்க்கையில் இரண்டு தளங்கள் உள்ளன. அனறாடவாழ்க்கையே பெரும்போராட்டமாக ஆவது. ஒவ்வொன்றுமே பெரிய துன்பமாக உள்ள வாழ்க்கை. இன்னொரு வாழ்க்கை எல்லாமே கிடைக்கும் வாழ்க்கை. இந்த இரண்டு நிலைகளிலுமே சாங்கியயோகம் எப்படி பதிலாக ஆகிறது என்பதைத்தான் இப்பகுதி காட்டுகிறது என நினைக்கிறேன்

மகாதேவன்