Friday, April 6, 2018

இருள்




ஜெ,



பீஷ்மரின் ஒட்டுமொத்த ஆழ்மனசையே சுழற்றிச் சிக்கலாகச் சொல்லிச் சென்றது. ஆனால் அதன் உச்சம் ஒன்று. அந்த பழைய அத்தியாயத்தை முதற்கனலில் வாசிக்காதவர்களால் இங்கே அதைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியாது. பீஷ்மர் சிந்துவில் கண்ட அந்தப்பெண். அவளை அவர் துறந்து வருகிறார். அது அம்பையின் ஒருவடிவம். அவள் இன்னொருவனை மணந்ததை அவரால் ஏற்கமுடியவில்லை. அவர் பொறாமைகொண்டு கூச்சலிடும்போதுதான் அத்தனை குலதெய்வங்களும் அவர்மேல் நாகங்களாக விழுகின்றன. அவர் என்னென்னவோ உணர்ச்சிகள் கொண்டிருக்கலாம். அவரைக் கட்டிவைத்திருக்கும் உணர்ச்சிகளில் முதன்மையானது இது. இதுதான் அவருடைய இருண்ட ஆழம்

மகாதேவன்