ஜெ
வெண்முரசின் இந்தப்பகுதியில்
சாங்கிய யோகத்தின் விரிவாக்கத்தை வாசித்தபோது நீட்ஷேயின் தஸ் ஸ்போக் ஜரதுஷ்டிரா வை
வாசித்தது போலிருந்தது. நீட்ஷே சொல்லும் அந்த மெய்ஞானம் என்பது முழுக்கமுழுக்க சாங்கிய
யோகம் மட்டுமே சார்ந்தது என்றுதானே சொல்லவேண்டும்?
நிகர்கொண்ட வேலே இலக்கடைகிறது. உணர்வுகளால், ஐயத்தால், மிகைவிழைவால் நிலையழியாது இயற்றும் செயல் வெல்கிறது. தோள்விசையை முழுதும் பெற்ற அம்புகளே நெடுந்தொலைவை கடக்கின்றன.
என்ற வரி நீட்ஷே சொல்லும் will
என்றுதான் தோன்றுகிறது.
மனோகர்