Monday, April 9, 2018

அறிவு விடுதலையா?



அறிவு என்பது விடுதலை என்றே பொருள்படும். எவ்வண்ணம் எவர் உரைத்தாலும் அறிவு விடுதலையை அன்றி பிறிதொன்றை அளிக்காது. அறிவினால் விடுதலை அமைவதில்லை, அறிதலே விடுதலையாகும். இந்தவரியைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இது எப்படிச் சரியாகும்? எவ்வளவோ அறிவுகள் மனிதனைக் கட்டுப்படுத்திச் சிறையிடுகின்றன. உதாரணமாக மதம் சார்ந்த அறிவுகள். சில மதக்குழுக்களைப்பற்றித் தெரிந்துகொள்ளாமலிருப்பதே நல்லது. அவை நம்மைஅ ழித்துவிடும்

அதேபோல அறிவு ஆணவத்தை அளிக்கிறது. ஆணவம் பெரிய சங்கிலிபோலக் கட்டியிட்டிருக்கிறது நம்மை. வெறும் ஆணவத்தை மட்டுமே அறிந்து அதிலே சிறைப்பட்டிருக்கும் ஏராளமான பேர்களைக் கண்டிருக்கிறேன். பழைய சிந்தனைகளும் இப்படி நம்மைக் கட்டிப்போடுவனதான். இந்தக்கூற்று எப்படிச் சரியாகும் எனத்தெரியவில்லை

சத்யா