அன்புள்ள ஜெ,
பிரத்யும்னன் ஒருபக்கம் தேவகி ஒருபக்கம் என இருவரும் எப்படி கண்ணனைப்புரிந்துகொண்டிருக்கிறார்கள்
என்று பார்த்தேன். திட்டமிட்டே இரண்டையும் அருகருகே கொண்டுவந்ந்திருக்கிறீர்கள் என
நினைக்கிறேன். தேவகி தன் மகனைச் சின்னவடிவமாகவே நினைக்கிறாள். அவனை பேருருவம் ஆக்கவே
இல்லை. அதேபோல பிரத்யும்னனும் தந்தையை சிறிய
உருவமாகவே பார்க்க நினைக்கிறான். விஸ்வரூபம் காண மறுக்கிறான்
ஆனால் அன்னை தன் மகனை சரியாகப்புரிந்துகொண்டிருக்கிறாள். அணுக்குள் கடலைப்பார்ப்பது
என்று வைஷ்ணவ சம்பிரதாயத்தில் சொல்வார்கள். ஆனால் பிரத்யும்னனுக்கு அப்படிப்பார்க்கமுடியவில்லை.
அதைத்தடுப்பது அவனுடைய அகங்காரம். பாண்டவர்களின் மகன்கள் எல்லாருமே கண்கூடகாக் கண்ட
கண்னனின் பேருருவத்தை அவருடைய சொந்தபையன்கள் காணாமல்போனதுகூட அவனுடைய அலகிலாவிளையாட்டுதான்
சாரதி