அன்புள்ள ஜெ,
வெண்முரசின் கடைசிப்பகுதியை இப்போதே வாசித்துவிட்டேன். அற்புதமான முடிவு. ஏர்கனவே
பலமுறை வாசித்த, கதைகளில் கேட்ட இடம்தான். ஆனால் இத்தனை அரசியல் விளையாட்டுக்கள், உணர்வுகள்,
சூழல் நிர்ப்பந்தங்கள் வழியாக அது அடையப்பட்டது என்பது பிரமிப்பூட்டும் விவரணை. வேறு
எந்தவகையிலும் இதை விளக்கமுடியாது. கண்ணன் ஒருபக்கம் யாதவர் ஒருபக்கம் என எப்படி பிரிந்தனர்
என்பதற்கு பாகவதமோ பிற்காலக் கதைகளோ கூட விளக்கம் அளிப்பதில்லை. எல்லாம் அவன் விளையாட்டு
என்று சொல்லி அப்படியே கடந்துசென்றுவிடுகின்றன
சாரங்கன்