Wednesday, June 6, 2018

சொல்லின் ஒளி



ஜெ, முதல் அத்தியாத்தில் ஒரு வரி வருகிறது. அது எழுப்பிய சித்திரம் மூன்று நாட்களாக மின்னிக் கொண்டே இருக்கிறது.

"அவர்கள் முகங்களில் சொல்லின் ஒளி இருந்தது. ஆனால் உதடுகள் அசைவற்றிருந்தன."
இதைப் படித்த உடனேயே நான் அந்தக் காட்சியைப் பார்த்து விட்டேன். சொல் அணைந்து, அதன் பொருள் இன்னமும் கண்களில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் தருணத்திற்கு இடைப்பட்ட மிகச்சிறிய கணம். 

ஏ வி மணிகண்டன்