Sunday, June 3, 2018

மீண்டும் இளைய யாதவர்




ஜெ,

பன்னிருபடைக்களத்தில் தமோகுணம் அடைந்து அர்ஜுனனுடன் போரிட்டு இருண்டு திரும்பிச்சென்ற இளைய யாதவர் அப்போதே குணச்சித்திரம் முழுமையாக மாறிப்போனார். அதன்பின் அவர் எழுதழலில் உதயசூரியன் போல எழுந்தபோதும்கூட போர்வீரராகவே இருந்தார். படையெடுப்புக்கு அசுரர்களைச் சேர்ப்பவராகவும், யாதவர்களின் ஒற்றுமையின்மையால் மனம் வருந்தியவராகவும் , வரவிருக்கும் போரைத்தடுக்க முயல்பவராகவும்தான் வேதாந்த ஞானம் உரைத்த தத்துவஞானியாகவும்தான் அவர் சென்ற ஐந்து நாவல்களில் வந்துகொண்டிருந்தார். கிருஷ்ணன் என்று நாம் அறிந்த அந்த விளையாட்டான சிறுவனைப்போன்ற கிருஷ்ணன் இனி வரப்போவதில்லை என்று நினைத்திருந்தேன். இதோ செந்நாவேங்கையின் தொடக்கத்தில் அவர்  இந்திரநீலம் வரை வந்த அதே இளைய யாதவராக மீண்டு வந்திருப்பதை முதல் அத்தியாயத்திலேயே வாசித்தேன். மகிழ்ச்சியும் இனிமையும் ஏற்பட்டாலும் வரவிருப்பது போர் என்பது கூடவே ஒரு சோர்வையும் அளிக்கிறது

மனோகரன்