Saturday, May 2, 2015

இரும்பு



ஜெ,

தீர்க்கசியாமர் சொல்லும் அந்தக் கதை உண்மையிலேயே மகாபாரதத்திலே உள்ளதுதானா? உலோகங்களின் பிறப்பைப்பற்றிய அற்புதமான உவமைக்கதை அது. பலவகையிலே விரியக்கூடிய குறியீடு என்று தோன்றியது. அந்தக்கதையைப்பற்றி யோசித்துக்கொண்டே இருக்கிறேன். பொன் வெள்ளி செம்பு இரும்பு ஆகிய நான்கும் நான்கு குணாசிதியசங்கள் என்று சிந்திக்கவே ஆச்சரியமகா இருந்தது

செல்வா


அன்புள்ள செல்வா

அந்தக்கதை வான்மீகி ராமாயணத்திலே உள்ளது.

அந்தக்கதை இங்கே கவித்துவமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலோகங்களை குணங்களாகப்பார்ப்பதென்பது மரபிலே உள்ளதுதான்.

இது இரும்பின் யுகம் என்பது அவ்வளவு சரியாக உள்ளது. அதை கார்ல் மார்க்ஸ் கூடச் சொல்லியிருக்கிறார்

இரும்பு கருமையானது. கலி என்ற சொல்லே காலா - கருமை என்ற வேரில் இருந்து வந்தது

ஜெ