கண்ணன் பிறந்த நாளில்.. 
 
 
அன்புள்ள ஜெ
 
 நேற்று ஜென்மாஷ்டமி. காலையில் எழுந்ததுமே கண்ணன் நினைப்பு. 
ஆகவே கண்ணனின் புகழை வாசிப்போம் என்று நினைத்தேன். வழக்கமாக பாகவதம். கூடவே
 கண்ணன் பாடல்கள். இந்தமுறை நீலம் வாசிக்கலாம் என முடிவுசெய்தேன். ஆகவே 
நீலத்தை வாய்விட்டு வாசிக்க ஆரம்பித்தேன். வீட்டில் அத்தனைபேரும் 
கூடிவிட்டார்கள். சிலர் ஏதோ பழைய கிளாஸிக்கல் நூல் என்றே நினைத்தார்கள். 
சில இடங்களில் சொற்களை விளக்கவேண்டியிருந்தது. ஆனால் ஒன்று கவனித்தேன். 
மௌனமாக வாசிக்கும்போது புரியாமல்போகும் பகுதிகள் கூட சத்தமாக அந்த மெல்லிய …