Tuesday, August 8, 2017

குணாதிசயம்






ஜெ
மதுரைப்பக்கம் naïve ஆன கொலைகாரர்கள் ஒரு உத்தியைச் செய்வார்கள் அவர்களால் cold bloodded கொலைகளைச் செய்யமுடியாது. ஆகவே கொல்லவேண்டியவன் மேல் வண்டியை மோதுவார்கள். அல்லது வேண்டுமென்றே இடிப்பார்கள். சண்டை வரும். இவர்கள் கெட்டவார்த்தை சொல்ல அவனும் சொல்வான். கோபம் வந்ததும் அரிவாளை எடுத்துப்போட்டுத்தள்ளிவிடுவார்கள்.
அதைத்தான் புஷ்கரன் செய்கிறான். அவனுடைய குணாதிசயம் அப்படி. கோபம் வராமல் கொல்லமுடியாது. அவள் அந்த தயக்கத்தை பயம் என புரிந்துகொண்டு குலவசை சொல்கிறாள். கொன்றுவிடுகிறான்

 அவன் அச்செயலை செய்யத் தேவையான சினம் தன்னுள் ஊறுவதற்காகவே முள்முனையில் தயங்கிக்கொண்டிருந்தான் என்பதை அவள் அறியவில்லை. முதற்கணத்தில் அவர்களிடம் எழுந்த தயக்கத்தை தன் சினத்தால் அச்சமென்றாக்கிவிடலாமென்ற அவள் எண்ணம் பிழையாகியது. அவள் உரைத்த இழிசொற்களால் அவனும் பிறரும் சித்தம் எரிந்தெழும் பெருஞ்சினத்தை அடைந்து எதையும் செய்யத் துணிபவர்களானார்கள். எப்போதும் அவர்களை கொதிக்கச் செய்வது குல வசையே. அவர்கள் நாடென, அரசென எழுந்ததே அச்சொற்களுக்கு எதிராகத்தான். அதை உள்ளூர அவள் அறிந்திருந்தமையால் அவளையறியாமலேயே அச்சொற்கள் அவள் நாவிலெழுந்தன.

இந்த ஒரு பத்தியை நாலைந்துமுறை வாசித்தேன்
ஜெயக்குமார்