Sunday, August 27, 2017

புஷ்கரன்

 
 
பதின்மவயதினனாய்  அண்ணன் தமயந்தியை மணம் புரியச் செல்கையில் உடன் வரச்சொனதை பெரும் பாக்கியமாக நினைத்த வாளேந்தவும் அறியாச்சிறுவனாய் இருந்த புஷ்கரன் இன்று தெய்வங்களின் ஆடலுக்கு ஆட்பட்டு கொலையாட்டு புரிவபவனாய், உறவுகள் அற்றவனாய், குடிகள் வெறுப்பவனாய், தீமையே உருவானவனாய் இருக்கிறான். அவன் தோற்ற விவரிப்பு அவனின் கீழ்மையை மட்டுமல்ல துயரையும் காட்டுகிறது
,
  புலரியின் குளிர்காற்றில் முழுமையான் தனிமையில் புரவியில் செல்லும் புஷ்கரனைக்காண்கையில்  தவிர்க்க இயலாமல் வழிமாறிப்போன மகனைக்காண்பதுபோன்ற உணர்வில் துக்கம் நெஞ்சை அடைத்தது. நாகசேனர் சுதீரனுக்கு சொன்னதைத்தான் நினைத்துக்கொள்ள வேண்டி இருக்கிற்து// அறமன்றி ஏதும் மண்ணில் நிலைத்துவாழாது. ஏனென்றால் அது தெய்வங்களுக்கு உகந்தது அல்ல. அன்னையரால் ஏற்கப்படுவது அல்ல. வேதத்துடன் ஒப்புவது அல்ல”//

அறத்தையும் தந்தை சொல்லையும் மேற முடியாத சுதீரர் அந்த முதியவரிடம் கேட்க்கும் கேள்விகளும் ஓவியத்திரைச்சீலையின் அப்பாலிருந்து வேறெவரோ பேசுவதுபோல கிடைக்கும்அதன் பதில்களும், அற்புதம். நெடுந்தொலைவென அத்தெருவை நாமும் அவருடன் கடந்தோம்
’’ஆம் நான் உஙகளை அளிப்பேன்’’ என்ற அவர் வாக்கு புஷ்கரனுக்கும் நமக்குமே எவ்வகையிலோ  வேறு வழியில்லாத ஒருஆறுதலாகவே இருக்கிறது இன்றைய பகுதி புஷ்கரனின் முடிவை முன்னரே அறிவிப்பது போல இருந்தாலும் அவன் மீது என்னவொ இரக்கமாய் இருக்கிறது

இவ்வழி, இவ்வழி என்று ஊழ் இழுத்துக்கொண்டு வந்து, அன்றைய இளைய யாதவருடனான படையாழிப்போருக்கு சிசுபாலனை முன்நிறுத்திய அன்று அவனை இழக்கப்பொகிறோம் என்னும் உணர்வு  தோன்றி கனக்க வைத்தது போல   இன்று புஷ்கரனுக்காக  நெஞ்சு கனக்கிறது

 லோகமாதேவி