முக்தனின் இறப்பு 
என்னையும் மிகவும் பாதித்து விட்டது. நாள் பூராவும் அவனின் நினைப்பு 
மனதினடியில். வேறு வேலைகளைனிடையிலும், வாசிப்பிலும் கூட ஒரு நெருடல், ஏதோ 
இழந்ததைப் போல. 
ஒரு
 உப கதாபாத்திரம் இவ்வளவு வாசிப்பவர்களின் உணர்வுகளை பாதிப்பது 
ஆச்சரியமே..! நீங்கள் கூறியது போல முக்தன் நெஞ்சில் மெல்லிய உதை போல அம்பு 
தைத்து விழும் போது நானும் நெஞ்சு கூட்டில் குருதி நிரம்பி விழுந்தேன்.
தனக்கு கொடுக்கப் பட்ட தூதுப் பணியை 
முடித்து விட்ட திருப்தியுடன் சென்று விட்டான் 
கண்ணீருடன்,
ராதிகா

