Wednesday, August 30, 2017

அபகாரம்’

 
ஜெ

கலியின் விளையாட்டு ‘அபகாரம்’ எனப்படுகிறது. இந்த நாவலுக்கே அபஹாரம் என்று பெயர் வைத்திருக்கலாம். ஓராண்டுக்காலம் பாண்டவர்களும் ஓர் அபகாரத்தில் சிக்கி வேறு ஒரு வாழ்க்கைதான் வாழ்கிறார்கள். அவர்களின் வாழ்க்கைக்கும் தமயந்தியின் வாழ்க்கைக்கும் நெருக்கமான ஒற்றுமை உள்ளது. எப்போது தமயந்தி எப்போது திரௌபதி என்று தெரியாமலேயே கதை பின்னிப்பின்னிச் சென்றவிதம் அற்புதமானது. அபகாரம் நீங்கி இருசாராருமே நகர்புகுந்தபோது நாவல் முடிகிறது. அபஹாரம் என்பது உண்மையில் ஒரு கண்கட்டுமாயை என்று நாங்கள் சோதிடத்தில் சொல்வோம். அது உண்மையில் நடப்பதில்லை. அப்படித்தோன்றுகிறது. நீர்க்கோலம் போல
முருகேஷ்